பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 64 — வானிருக்க நம்மைச் சுற்றிலும் வல்லிருள் போர்த்திருக்க வட்டநில வெழில் தானிருக்கக் காதல் (அதில் வாட்டிடும் எண்ணம் நமக்கிருக்க-இன்னும் வெட்கமென்ன? உனக்கான தென்ன? என்றன் பக்கலில் வந்தெனைத் தொத்திடடி! Ii 1 கானிருக்கும்! மலர் வாரியிறைக்கும் மணமிருக்கும்-குளிர் காற்றடிக்கும்படி ஊற்றிருக்கும்-அதை மாற்றிடக் காதற் கணப்பிருக்கும்-நிற்கக் காரணமேன்? இங்கு நாணுவதேன்-இளம் ஆரணங்கே யிதழ் மாந்திடடி! - I 2 (வேறு) கொட்டிவிட்ட பேச்சழகைக் கோதைப் பெண்ணுள் குமிழ்சிரிப்பைச் சிந்தியவா றிருந்து கேட்டே, எட்டிநின் றிருந்தவனின் அருகே வந்தே, - இதழ்தந்தாள்! அன்னவனும் தமிழ்ச்சுவைக்குக் கட்டிமாம் பழச்சுவையோ வென்று கூறி, கனியிதழைச் சுவைத்திருந்தான்; அந்நே ரத்தில் கொட்டிவிட்ட தேன்கூட்டைச் சுவைத்து நிற்கும் குறவாஇக் குறத்தியினுக் குறவா? வென்றே, 13 அதட்டிடுமோர் குரல் கேட்டுப் பதட்டத் தோடே ஆயிழையும் அன்னவனும் திருபிம்பிப் பார்த்தார்! 'உதட்டினிலே இனிமையுண்டா? உள்ளத் துண்டா? உரைத்திடுவீர்!" எனவுரைத்தான் கருப்பன், வள்ளி, பதட்டத்தால் சிங்கன்தன் தோளைப் பற்றிப், பதுங்கிவிட்டாள் கண்ணையனும் வந்திருந்தான்! அதட்டுவதற் கஞ்சாத சிங்கன் நீங்கள் ஆர்'என்ருன் அவர்கள்இடி போல் சிரித்தார்! 14