பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 65 — புன்னெஞ்சு படைத்தவரே! வந்த வாறு போய்விடுங்கள் புடைத்ததோள் வீங்கு மாயின் வன்னெஞ்சு முடைந்துவிடும்! வாயா டாதீர்! வந்துமுன் நிற்காதீர்' என்றே சிங்கன் கன்னெஞ்சர்க் குரைத்தவுடன் கருப்பன் சீறிக் "குருவிக்குஞ் சே! உன்னைப் பிழிவேன்’ என்ருன். ‘தென்னஞ்சா றேனன்பால் வருவாய் என்று தெரிவையினைக் கண்ணையனும் அழைத்து நின்ருன்! நெருங்கிவந்த கண்ணையனின் முகத்தெ லும்பு நொறுங்கிடுமா ருெருகுத்து விட்டான் சிங்கன்! சுருங்குழவின் கோதையினை நழுவ விட்டே, கருப்பனுடன் போர்செய்தான்! அவனும் வந்தான்! மருங்கொடிந்து விடுமாறு மாற்றி மாற்றி மறவர்களைத் தாக்கிநின்ருன், சிங்கன்! மூன்று பெருங்குன்றத் தோள்கட்குள் ஒன்றுக் கொன்று பொருதினவே முடிவில்களைப் பெய்தி ஞர்கள்: 16 நெட்டாகப் போய்வீழ்ந்தான் கருப்பன்; சிங்கன். நெருங்கினன் கண்ணையன் பாலே! அன்ன்ை கட்டாரி எடுத்தவனைக் குத்தச் சென்ருன்! கைதன்னைத் தடுத்ததனை வாங்கிச் சிங்கன், விட்டெறிந்தான் கீழதனை நகர்ந்து சென்று வன்கருப்பன் பற்றிவிட்டான்'; குறியை வைத்து, விட்டெறிந்தான் சிங்கன்மேல் வள்ளி அஞ்சி விலென்று கத்திவிட்டாள்! அதற்குள் ளாக 17 ஐயோவென் றலறிக் கண் ணயன் சாய்ந்தான்! அவனைப்போய்ச் சிங்கனுடன் தாங்கிக்கொண்டான்! கையூன்றி, யெழுந்தவனுய்க் கருப்பன் ஒடிக் - கவ்விருளில் மறைந்துவிட்டான் சிங்கனைப் போய்