பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 66 — மெய்தழுவிக் கொண்டவளாய் வள்ளி அஞ்சி, முன்வந்தே கண்ணையனைக் கண்டாள் சிங்கன் 'பொய்தழுவி வாழ்ந்தவனுக் கெடுத்துக் காட்டாய்ப் போனன்” என் ருன்;அவளும் "ஆமாம்! என்ருள்! 'வஞ்சனவன் வைத்தகுறி என்நெஞ் சிற்கே: வாள்வந்து கண்ணையனின் முதுகிற் றைத்தென், நெஞ்சதனைக் காப்பாற்றி விட்ட தென்ருன், நேர்மைவெல்லும் அத்தான்ளப் பொழுதும்” என் tருள்! வஞ்சியினை வழிநடத்திக் குடிவில் விட்டு, 'வருகின்றேன் காலையில் நான் நடந்த தெண்ணி, அஞ்சாதே! வள்ளி'எனக் கூறி அந்த அணியிரவு நடந்ததுபோல் நடந்து சென்ருன்! 19 சென்றவனே நடுவழியில் மறித்தார் சில்லோர்: சிங்கனுமஞ் சாதவரை விளக்கம் கேட்க, நின்றவருள் கருப்பன் முன் வந்து நின்று, "நீதான்.அக் கண்ணையனைக் குத்திக் கொன்ருய்! என்றனையும் தாக்கினை! இங்கிருப்போ ரெல்லாம் இவ்வூரின் மன்றத்தார்’ என்று கூறக் குன்றனைய தோள்கொண்டோர் இருவர் வந்து, குரங்குபோல் சிங்கனேயே பிடித்துக் கொண்டார்! மன்றத்தார் தம்மிடத்தில் கருப்பன் கூற்றை மறுத்தவா றவன் இயம்ப, அவர்கள் கேட்டு, 'மன்றத்தில் சொல்லுங்கள்’ என்று கூறி, மாய்ந்தவுடல் தூக்கிவரும் இருவர் தம்பால், 'சென்றிந்தப் பிணந்தன்னைச் சோதித் திமச் சீர்செய்வீர்” என்ருணை யிட்டுச் சென்ருர்! குன்றத்து வீழ்ந்திடினும் தாங்கு தோளான், குனிந்தவா றவர்பின்னைச் செல்ல லுற்ருன்! 31