பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்ட தமிழரின் அரசியல் வாழ்வில் இல்லா தொருபழி ஏற்றிட வேண்டாம்! சென்றவள் குடிலைச் சேர்த்ததும், கிழவர் நன்றுறங் கிடஅது நல்லதென் றெண்ணி, மெல்லென நடந்து, மேனியைக் கீழே மெல்லெனக் கிடத்தி, மொய்விழி யோடும் நடந்த கொடுஞ்செயல் நினைக்கும் நெஞ்சொடும் கடந்தாள் சிலநொடி, கண்ணேங் கியவள் அயர்ந்து தூங்கினுள்: அதுகால் யாரோ, பெயர்ந்து வருவது போல்மெல் லோசை கேட்டது செவியில்; கோதை எழுந்து பார்த்து நெஞ்சு பதைத்தனள் கருப்பன் fg ஓங்கிய கையில் ஒளிவிடுங் கத்தியும், தூங்கிய கிழவரைச் சேர்த்துக் கட்டிடக் கயிற்றுச் சுருளினைக் கையிலும் கொண்டு நெருங்கி வந்தான்! நீள்புரு வத்தில் உருண்டது. வெயர்வை ஓவெனக் கதற வாயெடுத் தாளே வாளினைக் காட்டி, வாய்மேல் விரலை வைத்தவன் சொன்னன்! கள்ளி! தப்பிய கானப் புறவே! கிள்ளிய இறகொடு கிளம்ப எண்ணினை! ஒலிசெய் வாயின் உயிர்பறித் திடுமிவ் 20 வொளிசெய் கைவாள்; உணர்ந்திடு கென்று துரங்கிய கிழவரைத் தட்டி யெழுப்பிட ஆ’வென் றலறிஞர்! அன்னவர் வாயில் துணியைச் சுருட்டித் திணித்துக் கயிற்ருல், கட்டிலில் அவரைக் கட்டிய பின்னர்