பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 68 — மொட்டவிழ் குழலாள் முன்கை தன்னைப் பற்றி யிழுத்துப் பால்நில வொளிரும் வெற்று வெளிக்கு விரைந்தனன்; நூலிற் கட்டி யிழுத்தும் கரகர வென்று சுற்றியும் மகிழும் சிறுவன் கையின் 36 பொன்வண் டென்னப் பேதை மயங்கினள்! ‘மின்னல் இடையே மிளிர் பொன் பாவாய்! கன்னல் ஊறிடும் கனிவாய் தந்தே, என்னை அணைந்திடின், ஏற்றம் அடைவாய்! பொதிமலர் விற்றுப் பிழைக்கும் உன்னடி மிதிமலர் மிசையின் மென்னடை ஏற்கும்! பாழ்குடில் வாழும் பைங்கிளி உன்றனைக் கோள்தொடு மாடத்துக் குயில்குஞ் சாக்கி, வைப்பேன்’ என்ருன் வான்கருப் பன்;நேர் வைத்த நெஞ்சில் வைத்த நெருப்பெனப் 40 பற்றி யெரிந்திடப் பாவை யழுதனள்! பெற்றி மறைத்திடும் சாதித் தொல்லையும் பணப்பேய்த் தொல்லையும், கற்பைப் பறித்திடும் கயவர் தொல்லையும் குடில்உறை வோர்க்குத் தொலைவ தெந்நாள்? தோன்றிய மகிழ்வை அலேக்கை நீட்டி அணைப்ப தென்றென எண்ணிய தவளின் ஏழை யுள்ளம்! எண்ணிடு முன்னர் இரும்பென இடையைச் சுற்றி வளைத்தது சிற்றறி வோன்கை! நெற்றி வெயர்த்த நீரும் கண்களிற் 50 கொட்டிய நீரும் கொடுமை நெஞ்சைத் தளர்த்திட இயலா தாகின; உடனே நிலத்திடை வீழ்ந்து, நெட்டுயிர்ப் போடு வேண்டாம் இந்தக் கொடுஞ்செயல் அண்ணு! தீண்டா தீர்கள்! தீராக் கறையை