பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 69 — களங்க மில்லாக் காரிகை உள்ளத் திலங்க விட்டே, எனமாய்க் காதீர்! வேண்டாம்! வேண்டாம்! விடுங்கள் விடுங்கள்! ஆண்ட தமிழரின் அரசியல் வாழ்வில், { {} இல்லா தொருபழி ஏற்றிட வேண்டாம்! எள்ளி நகையாடி இழித்தும் பழித்தும், பிறர் தம் ஒழுங்கைப் புறத்தில் தள்ளி, அறமும் மறமும் அறிவோ டியங்கும் உயர்ந்த தமிழ்நாட் டொழுங்கே ஒழுங்கெனும் மாய்விலாக் கொள்கையை மாய்த்து விடாதீர்! மாசிலா இந்நாட்டு மங்கை ஒருத்தி மாசு பட்டிடின் மாயாப் புகழைப் பேசுதமி ழேட்டிற் போகாக் கறையே! ஏசும் பிறநாட் டிலக்கியம் நம்மை! காலில் விழுந்துகண் நீராலுங் காலைத் 7:) தூய்மை செய்கின்றேன்; துளிமகிழ் விற்கோ வாய்மை யிழப்பதென் அண்ணு! விடுவீர்!’ என்றே பலவா றியம்பிய பின்னர், நின்றவன் சிரித்த நீளச் சிரிப்பில் அத்துணைக் கருத்தும் அடங்கிடத் தொடர்ந்து "கூடும் வேளையிற் கூறிய அறிவெலாம் ஒடும் புனல்வீழ்ந்த ஒருதுளிக் கொப்பாம்! அன்றில் பேடே அணைகென வந்தே என்றிளங் கொடியை இழுத்தவன் அனைத்துத் துடித்த நெஞ்சொடும் துவளும் உடலொடும் &G பிடித்த பிடிக்குப் பேதை மயங்கினள்! பெரும்புயல் வீசிடப் பைங்கிளி யுள்ளத் திருள்சூழ் வதுபோ விருந்தது! மாற்ருன் படையினைத் தகர்த்துப் புகழ்மிக நின்ற குடையினைக் காத்த குன்றுதோள் மறவன்