பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 70 — போலவன் நின்ருன்! புள்ளுவன் எய்திய வேல்பட் டிறந்த விளர்மான் போலும் தரையில் கிடந்த தளிர்க்கொடி யைப்போய் நிறைந்த நெஞ்கொடு நெடுவான் கருப்பன், ஒருமுறை நோக்கி ஒருநகை சிந்தப், 96 பெருஞ்சினங் கொண்டு பிதற்றிய சொல்லை, அரற்றிய வாருய் அவள்விரைந் தெழுந்து வெறிகொண் டறைய ஓங்கிய கையை, யாரோ தடுத்தனர்; யாழிசை நங்கை அஞ்சி நடுங்கி அலர்விழி திறக்கப் பஞ்சு டற் கிழவர் பக்கத் திருந்தார்: காலை மலர்ந்த கதிரவன் ஒளியவள் மேல்விழுந் தழகை மெருகொடு காட்டும்! கருப்பன் வந்ததும், கட்டிலிற் கிழவரை இறுகக் கட்டி இவளே யணைத்திடக் i (; 9 கண்டதும் யாவும் கனவென் றுணர்ந்தனள். அண்டையி லிருந்த கிழவர் அவளது நுதலை நீவி, நீயுறங் குங்கால் பிதற்றினை யம்மா? பெருங்கன வோஅது? யார்யார் வந்தார்? நடந்தது யாதோ? என்று விளித்தார்! - இரவில் நடந்ததும் கண்ணையன் தன்னைக் கருப்பன் கொன்றதும் சொன்னுள்; உடனவர் சேயிழை தன்னிடம் வள்ளிநான் சொன்ன வாய்மை யாவையும் தள்ளினே! நீயுமத் தடந்தோள் மறவனும் 1 1 0 இளமை பொறுமையை இழந்திடும் என்னும் நிலையினை உணர்த்தினர்? நேற்று நடந்தவை ஒருபால் கிடக்க; உன்மன மேறிய மறவன் இன்று வருவனே? உரையென வருவார், வருவார்’ என்றனள் வள்ளி!