பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 15 } ! பெண்ணேப் பேணிய பெருமையிந் நாட்டு மண்ணிற் குரியது! இருந்த நூல்பயின் றேறிய கருத்தைத் தெரிந்து தெளிந்து தேர்ந்த புகழ்மிகும் செவ்விய அறிவினர் சேர்ந்தஅம் மன்றம் அவ்வூர் நடுவில் அமைந்தி ருந்தது! கண்ணையன் தன்னைக் கொன்ற செய்தி எண்ணெய்த் துணியில் எரிபர வுதல்போல் விரைவில் அவ்வூர் மக்கட் செவிகளை நிறைத்திட மன்றில் நிறுத்திய சிங்கனக் காண விரைந்தனர்; கருப்பன் மகிழ்வொ(டு) - ஆன கொலையில் அவனொரு தொடர்பும் Jo இல்லா தவன்போல் இருந்தான்; மன்றத் தெல்லாப் புலவரும் எய்திய பின்னர் வழக்கு நடந்தது: வந்திருந் தவரின் முழக்கம் நின்றது; முதியவர் ஒருவர் எழுந்து நடந்திட விருக்கும் வழக்கின் முன்கதை கூறி முடித்த பிறகு மன்றில் ஒருவர் கருப்பனை அழைத்தே 'உனக்குத் தெரிந்தவை உரைப்பாய்’ என்னக் கருப்பன் எழுந்து கூறிடு கின்ருன்; 'எனக்குத் தோழன் இறந்த கண்ணையன்; 26 அவன்பல நாட்களாய் அதோ நிற்கும் சிங்கனின் சூழ்ச்சியில் சிக்கிய வள்ளியை அறிவான்; அவளும் அன்னவன் மேலாய்க் குறிதான்; இருவரும் கொண்ட எண்ணத்தால்,