பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 73 — காதல் கொண்டனர் ; கண்ணையன் தன்னை அவளும் மணந்திட ஆசை கொண்டனள் ! அவளே அவனும், அவனே அவளும் தத்தம் உளத்திற்குத் தக்கவர் என்றே எண்ணி இருந்தனர். எங்கோ இருந்து சிறுநரி போலிச் சிங்கன் வந்தபின் 30 கண்ணையன் பாலவள் காட்டிய அன்பு மண்ணுய்ப் போனது "மாண்ட நண்பன் உயிரோ டிருந்திடில் ஊறுவருமென எண்ணிய இவனே என்னருந் தோழன் கண்ணையன் தன்னைக் கொலைசெய் திட்டான் ! செருக்கன் இவனைச் சிதைத்தெறி யாமல் இருக்க விட்டால் இன்னும் தொல்லையே! -என்று பேசி இறுமாந்து அமர்ந்தபின் மன்றத் தொருவர் மீண்டும் எழுந்து சிங்கன நோக்கிச் செப்பிடு கின்ருர்; "இங்குப் பேசிய இவரது கருத்தில் வேறு பாடுகள் விளக்குவ தாயின் கூறுக, அமர்ந்துள குழுஅறி யட்டும் !” பழந்தமிழ் பயின்ற பேரறி வாளர்முன் எழுந்து வணங்கி இயம்பிடு கின்ருன்; "அழகுப் புனல்நாட்டை ஆண்டதமிழ் மன்னர் பழகிய நெஞ்சொடும் பயின்ற அறத்தொடும் நின்ற வழிதனில் நின்றறங் கூறும் மன்றிற் கென்றன் மனமகிழ் வாழ்த்து ! பெண்ணைப் பேணிய பெருமையிந் நாட்டு 5{} மண்ணிற் குரியது மாற்ருர் வந்தபின் ஆரியர் ஒழுங்கும், அயலார் பழக்கமும் ஊரில் பரவி உயர்ந்த நம்நாட்டு