பக்கம்:கொலைக்களம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமுழக்கஞ் செய்திடுவீர்! இந்திய அரசியல் உலகிலே - குறிப்பாக ஆட்சிப் பீடத்திலுள்ளவர் உலவும் வட்டாரங்களிலே, பலம் பொருந்திய 'மத்திய சர்க்கார்!' தேவை என்ற குரல் சிலகாலமாகக் கிளம்புகிறது! "மாகாணஉணர்ச்சி, பேதத்தை, பிளவை, வேற்று மையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக் கொள்கை." அந்தக் கொள்கை இந்தியாவில் பரவினால், இந்திய சமுதாயம், பலம் பொருந்திய அமைப்பாக இல்லாமல் சின்னாபின்னமாகச் சிதறிவிட வழிவகை செய்துவிடும். ஆகவே, தேச பக்தர்களே! தியாகிகளே! பாரத மாதாவின் புத்திரர்களே! மாகாண உணர்ச்சியை வளர்க்காதீர்கள்! வளர்த்தாலும் தடைப்படுத்துங்கள்! இந்த விதத்திலே, அரசியல் பண்டிதர், இந்தியா வின் முதல்வர் என்றெல்லாம் போற்றப்படும், பண்டித ஜவஹர்லால் அவர்கள் கோவையிலே, டில்லியிலே பேசினார் ! அன்பர் ஆச்சாரியாரோ, அந்த உணர்ச்சி இப் போது வேண்டாம் என்று இதோபதேசம் புரிகிறார். ஆகஸ்டில் சுதந்திர சூரியன் உதித்தான்! ஆண்டு களும் அனேகம் ஆகிவிடவில்லை! அதற்குள் இந்தப் பிரிவினை மனப்பான்மை கூடாதுதான் என்று விரிந்த மனப்பான்மையினர் ( ! ) விவேக (!) சிந்தாமணி படிக்கின்றனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொலைக்களம்.pdf/34&oldid=1694780" இலிருந்து மீள்விக்கப்பட்டது