பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

________________

10 ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒருகாலத்திலே சுவை தருவ தாகக் கருதப்பட்டுவந்த திறமை, பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக் கூடும். எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெறமுடியும் என்றும் நம்புவனுமல்ல; திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடியவனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள். தங்கத்திலே ஒரு குறை உண்டானால் தரமும் குறைவதுண்டோ? உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால் அன்பு குறைவதுண்டோ? இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது. பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளை யும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக்காட்டு கிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள ஒரு வார்த்தை, "ஆமண்ணா! குறைகள்தாம் இவை! என்று எனக்கு. இன்று கண்டிப்பவர்கள், எடுத்துக்காட்டி னார்களா என்றால். இல்லை! மாறாக, என்மீது பழி கூறிய வர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர். சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது. பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும் - அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்! அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விட வில்லை.