பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

________________

103 கேட்போரைச் சொக்க வைக்கும் இசை வாணனுக்கு காய்ச்சல் கண்டால், பக்கத்தில் உள்ளோரின் காதுகுடையும் விதமாக இருமுகிறார்! அதற்காக அவர் மீது கோபித்துக் கொள்கிறோமா? பரிதாபப்படுகிறோம்!! காது குடைச்சல் எடுக்கும் படியாக அவர் இருமும்போது கூட, அவர் நன்றாக இருந்த போது பாடியபண்ணின் இனிமையைக் எண்ணிக்கொள்கிறோம்; அந்த எண்ணமே நமக்குத் தேன். அது போலத்தான் இ.து. ஆகவே, தம்பி! இன்று ஏற்பட்டுவிட்ட போக்குக் கண்டு. மனம் பதறாதே. கோபம் கொள்ளாதே! வெளியே எடுக்கப்பட்டு விட்ட முத்து மீண்டும் சிப்பிக்குள் போய் விட முடியாது; சிப்பியும் முத்துதனை எடுத்து வைத்துக கொண்டு, கடலிடைச் சென்று ஒளிந்துவிட முடியாது. அது போலவே. திராவிட நாடு பிரிவினைக்கான ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றினை அளித்தவர், அவைகளைத் தம் முடன் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை- போய்விட முடியாது- முத்து நம்மிடம் -சிப்பி இடம் மாறிவிட்டிருக் கலாம் - அவ்வளவே. " தூற்றிப் பேசுகிறார்களே என்று துயரப்படாதே தூற்றிப் பேசுவோரின் பட்டியலில், சில புதிய பெயர்கள் இணைக்கப்படுகின்றன; வேறொன்றுமில்லை என்று எண் ணிக் கொள். தொடர்பே இல்லாதவர்கள் நம்மைத் தூற்றவில்லையா? நாம் தாங்கிக் கொள்ளவில்லையா? அவர் களை விட, இவருக்குச் சற்று உரிமை அதிகம்தானே இருக்கும்; தொடர்பு காரணமாக. தோழமை இருந்த கரரணமாக! எனவே ஏசட்டும். எரிச்சலூட்டலாம் என்ற நோக்குடன் ஏசுவர்; நீங்கள் மட்டும், ஏசல் கேட்டும் மனம் கலங்காத நிலையைப் பெற்றுவிடுவீர்களானால், அதனை விட வலி ஓட்டும் வாய்ப்பு வேறு இல்லவே இல்லை என்பதை உணருவீர்கள்.