பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

________________

105 நேரு வீசாத கண்டனமா. கேலிக் கணையா, இனி ஒருவர் வீசப் போகிறார்கள்? என்ன செய்தோம், அவர் உரை கேட்டு? ஏகாதிபத்தியப் போக்கு அவரை அப்படிப் பேர வைக்கிறது என்று எண்ணிக் கொண்டோம்; அவர் உரையை ஏற்க மறுத்தோம் நம்மில், தோழர் சம்பத்து போன்றவர்களோ, பழைய நேருவை விட்டுப் புதிய நேரு வுக்குப் புத்தி புகட்டச் சொன்னார்கள். நமது கொள்கைகளை மறுப்போர்ன் பேச்சைக் கேட்டு. மனம் பதறாத போக்கு, கட்டாயம் ஏற்பட்டாக வேண்டும். அவர்கள் பரப்பும் தப்புப் பிரசாரத்தை மறுத்து, மக்களுக் குத் தெளிவளிக்க, நமது கொள்கையின் நியாயத்தை நிலை காட்ட, நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் நமது நியா யத்தை மெய்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும், வாய்ப் பும், நமக்கு இருக்கும் போது, காம் ஏன் பதற வேண்டும் - பேசுவோர் மீது சன் ஆத்திரப்பட வேண்டும்- கலகம் விளையும் நிலை முன் பிறக்க வேண்டும்? வேண்டாம், தம்பி! வேண்டாம்! நமது கொள்கையின் தூய்மையும் வலிவும், தரமும் பழுது படாதபடி நாம் பாது காத்துக் கொள்ள வேண்டுமானால், எவர் நமது கொள்கை களை, கழகத்தவரை, மனம் போன போக்கில் ஏசினாலும், ஒரு துளியும் பதறாத நிலை - அமைதியான மன நிலை, நமக்கு ஏற்பட்டாக வேண்டும். தணலில் போட்டு எடுக்கிறார்கள் தங்கத்தை. நினைவில் இருக்கட்டும். புடம் போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள். தி.மு. கழ கத்தில் இருக்கிறார்கள் - இது போனவர் சொன்னது. இதனை மறவாதே! என்னைப் பொறுத்த வரையில், இதனைக் கூறுவேன்- என்னை எவர் இழிவாகப் பேசினாலும், கவலைப்படவில்லை.