பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

________________

106 எனக்கென்ன குறை, நம்பி! உன் இதயத்தில் எனக்கு இடம் இருக்கும் போது. பிரிந்து சென்றவர்கள் கொதித்துப் பேசும் போதும் கூட, அவர்களைப் பற்றிக் கடிந்துரைக்காதே- எனக்கு நிச்சயமாக அது பிடிக்காது என்பது மட்டுமல்ல- கனி யிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ அது நமது பண்பு எனக்கொள்ள வேண்டும். எனக்கு இன்றும், பிரிந்து போனவர்கள். என்னை இழித்தும் பழித்தும் பேசுவது பற்றிக் கோபம் வரவில்லை: இருந்த நாட்களிலே நிகழ்ந்தவைகளைத்தான் எண்ணி எண்ணி உருகியபடி இருக்கிறேன்; என்ன செய்வது தம்பி! எனக்கு இதயம் இருக்கிறதே!! கொளுத்தும் வெயில் 3 கொட்டும் மழை கடுங்குளிர் கருக்கல் பேய்க்காற்று இவை எதனையும் எதனையும் பொருட்படுத்தாது, அவர்கள். கருமமே கண்ணாயினர்; பழச்சாறு பருகினர்; பூங்காற்றுத் தேடினர்; புதுப்புனலாடினர்; இசை கேட்டு இன்புற்றனர்; கனிப்புத்து வல்லனவற்றிலே எல்லாம் மாறிமாறி ஈடுபட்ட னர், மற்றவர்கள்; அவர்கள், எல்லாம் பெற்றாகிவிட்டது. இனி நமக்குக் குறையேதும் இல்லை, வாழ்க்கை ஒரு இன்பர் பூங்காவாகிவிட்டது; கேட்டது கிடைக்கிறது; தொட்டது மலருகிறது; நினைப்பது நடக்கிறது; இனி நாம் பெற்றவை தளைச் சுவைத்து மகிழத்தான் காலத்தைப் பயன்படுத்த வேண்டும்; கொளுத்தும் வெயில் எனில், குன்றேறிக் குளிர்ச்சி நாடுவோம்; கடுங்குளிர் எனில், கம்பளம் உண்டு, அழகியதாய், வரதியாய், குளிரைப் போக்கிக்கொள்வோம்.