பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

________________

107 பேய்க்காற்றும் பெருமழையும் குடிசைகளைப் பிய்த்தெறியும் மண் சுவரினைக் கீழே சாய்த்திடும், நம்முடைய கோட்டை மீது வீழ்ந்து அவை தம் வலிவிழந்துபோகுமேயன்றி வேறென்ன கெடுதலைச் செய்திட இயலும்? எனவே ஆடு வோம், பள்ளுப் பாடுவோம். அடைய வேண்டியதை எல்லாம் அடைந்து விட்டோம் என்று அகம் மிக மகிழ்வோம் என்று இருந்தனர். சிலர் மட்டும், ஓ வுக்கு நேரம் இல்லை; உறக்கமோ வருவதில்லை; இடுக்கண்கள் இருப்பதாலே எடுத்த காரியத்தை முடித்திட மேலும் மும் முரமாகப் பணியாற்றிடவேண்டும்; எனவே கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கடுங்குளிர், பேய்க்காற்று, கருக்கல் எனும் எதனையும் பொருட்படுத்தாமல், பணியாற்றியபடி இருந்தனர். மற்றவர் எள்ளி நகையாடினர், "ஏடா மூடா; ஏன் இந்த வீண் வேலை! நான் தான். நீயும் மனித இனம் தானே என்றெண்ணி மனம் இளகி, எண்ணற்றவர்கள் இருந்திட ஏற்றதாம் என் எழில் மணிமாடத்தில், ஆனினம் தங்கிட அமைந்ததோர் இடத்தினிலே, சென்று தங்கிடுவாய் செய்தொழிலைக் காட்டிடுவாய், நல்ல ஊழியன் என்ற பெய ரெடுத்து நாலாறும் பெற்று காலத்தைக் கடத்திடுவாய்! உண்ணத் தந்திடுவேன், உழல்வானேன் வயல்தேடி; வண் ணம் இல்லை எனினும், இருந்ததுதான் இந்த ஆடை; அங்கம் மறைத்திட அதுபோதும் அல்லவோ சொல்; தந்திட நானிருக்கத் தவிப்பானேன் வேறுபெற; வந்திடு என் முற்றம்; வாழ்வளிக்க முடியும் என்னால்; வதை பட்டுச் சாகாதே, வரம் தந்தேன் உதறாதே!" என்று பேசினர். ஆனால், அந்த உழைப்பாளிகளோ, ஓயவில்லை, உறங்கவில்லை, மயங்கவில்லை, மனம் மாறவில்லை. வேலை! வேலை! வேலை! செய்தவண்ணம் இருந்தனர். வெட்ட வெளி! பொட்டல் காடு! தண்ணீர் கிடைக்காத வறண்ட திடல்!- இருக்க இடம் இதிலாம்! எழில் இல்லம் இவ்விடமாம்! சுற்றும் மணற்பரப்பு! செடி கொடியும்