பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

________________

11 அண்ணன் அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து 3பசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே ! தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும்போதெல்லாம், நான் வரவு- செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன் - மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என் பதை எடுத்துக்காட்டத்தான். எந்தத் தூற்றலையும் நான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக. எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன் -- நான் கூறுவது பளிச்செனத் தெரியும். மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலமா என்று கேட்டு விடாதே- நான் அப்படி!- என்ன செய்யலாம்!! கதை யைக் கேளேன் - கருத்து இருக்கிறது. - ஒரு மருத்துவன். பிழைப்பு நாடி வேற்றூர் சென்றா னாம் - ஒரு நாள் க அந்த ஊர் மக்களிலே, பலர், காலை வெயிலில் உலவி கொண்டும், வேலை செய்துகொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு. காலை வெயில், பித்தம் உண்டாக்கும். இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சய மாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும். நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம்; என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென் ற, மருந்தும் பெட்டிகளுடன், மாலை, வந்தானாம். வந்ததும்,மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றம். காரணம்