பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

________________

110 மாம் மந்தியுந்தான்; மத்தி நடத்திடும் ஓர் நாட்டியமே பாட மாகக்கொண்டிடுவோம் என்று அந்தக் கோலமயில் எண்ணி டுமோ? ஏதேதோ இன்ப நினைவுடனே ஏந்திழையாள் இடுப்பில் குடம் வைத்து இன்பன் இதயம் துவைத்துச் செல்கையிலே, குப்பை கிளறிடும் ஓர் குக்கல் காணின்,நின்று என்னே! இதன் திறமை! எதற்குண்டு இவ்வாற்றல்! என்றாஎண்ணிநின்று எக்களிப்புக்கொள்கின்றாள். இவரோ 'இருப்பவர்கள்'- இருப்பதுவோ பறித்தவைகள் ---நமக்கோ இடம் இல்லை,நம் இடமோ மாற்றாரால் பாழாகிக் கிடங் கும் இடம்! நாம் அதனை அறிந்தபின்னர், திருத்த, புதுப் பிக்க, திறம்பெற்றுப் பணிபுரியத் துடித்திடுவதல்லாமல், தூற்றல் கணைதொடுத்து தூய்மையினைக் கெடுத்திடுதல், நன்றாமோ! அழைக்கிறது, அறம், அன்பு!! ஆற்றலெல்லாம் அவைதமக்கே! என்று எண்ணி, ஈடுபட்டார் எடுத்த பணிய தனில், பாழ் வெளியில் ஓர் பசுமை பாங்குறவே வந்தது காண்! வெட்ட வெளியதுவும், வேற்றுருவம் பெற்றது காண்! சின்னஞ்சிறு கூடம்- கேணி ஆங்கொன்று - அதன் பக்கம் பூச்செடிகள் - மாடியும் அமைத்திடலாம். அடித் தளம் வலிவுற்ற தென்பதனால்; காற்றும் வெளிச்சமும் களிப்பூட்ட வருமாறு கட்டினர் காண் புது இல்லம். அழகுண்டு அளவறிந்து: வசதியுண்டு. வசை அளவு! இந்த முறையில் நல்லில்லம் அமைத்து அவ ரும் இன்புற்று,நம் உழைப்பு வடிவம் பெற்று, நமதாகி நின்றது காண்! எவர் எண்ணினர் இது இயலும் என்று முன்னம். என்னென்ன ஏச்சுகள், எத்துணை ஏளனங்கள்! கூடை எடுத்து நாம் சென்றிடுவோம். குரலெழுப்பி கல் வீசிக்குலைத்திடுவார் நம் ஆர்வம். எழுப்பிய சுவர் தன்னைக் கைத்தடியால் சாடி "ஏடா பயலே! இஃது! இரு நாட்கள் நின்றிடுமோ?" என்று கூறி, அச்சம் எழச் செய்து மகிழ்வுற்றார். கட்டியவர் கட்டியவர் எவர் அப்பா? கல்