பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

________________

112 கல்லெல்லாம் கதை சொல்லும், இல்லம் இஃதன்றோ! மண்ணதனில் சிந்தியது மழை நீரோ? இல்லை, இல்லை! செந் நீரும் கண்ணீரும் தொட்டியன்றோ, செம்மை கண்டோம். இந்த இல்லத்தில், அன்பு அரசோச்சும், அறிவு ஒளி அளிக் கும்: அறம் வழி காட்ட, ஆற்றல் நடைபோட, அனைவரும் தாம், இலட்சியம் அடைந்திடும் முறை வகுக்க, பாசறையாக அமைந்தது காண் நமது இல்லம்; அனைவருக்கும் இது இல்லம் - அனைவரும் அமைத்த இல்லம் - அவர்க்கு எது இவர்க்கு எது என்று அளவு காணும் முறைக்கு இங்கு அணுவளவும் வேலை இல்லை. இகல் வெல்ல வேண்டுமெனில் கம் இதயங்கள் ஒன்றாகி வெவ்வேறு உருவங்கள், எண் ண மோ ஒன்றேதான், என்று எவரும் எண்ணிப் போற்றிட. வாழ்த்திடுவோம். இல்லம் அமைத்ததுவும் இருந்து மழ்ந் திடவா? இல்லை! இல்லை! மன்றமாக்கி, இம்மனையில் நாம் இருந்து, கொண்ட நம் குறிக்கோள் தனக்காக, தொடர்ந்து பணியாற்ற, தக்கமுறை, வழி பலவும், கண்டறிய, திட்ட மிட இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டதென்றால். இடத்தில் இடம் காண எண்ணுவரோ, எவரேனும்! கேணித் தண்ணீர் இறைத்து,கீழ் உள்ள கற்களை எடுத்துப் உங்குபோட, கருதுபவர், கசடரன்றோ! நாமென்ன இந்த விவரமெல்லாம் அறியாமல். வீண்வாதம், மனபேதம், கொண்டிடக் கடையவரோ? நம்மில் சில பேர்கள் கூடம் இருந்திடுவர். அவ்வேளை. திண்ணையே நமக்குக் கூடமாய். அமையாதோ! தோட்டத்து வேலைதனைத் அரைசாமி கவனித்தால், கூட்டி மெழுகிட குப்பன் முன் வாரானோ? கூட்டி மெழுகிடும் குப்பன், மற்றோர் நாள், கூடத்தில் இருக்கையிலே ஓய்வாகச் சாய்ந்துகொண்டு ஒரு முழுங்கு தண்ணீர் பருகிடத் தருவாய் என்று அண்ணலை அழைத் திட்டால், கேணி வேலை வேணு பார்ப்பான், என் வேலை அஃதல்ல, என்ற கூறிடுவான். நாமெல்லாம் ஓர் குடும்