பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

________________

119 சொல்லமாட்டார்கள் - நவஇந்தியாவும் - சக்தியும் விளக்கை அணைத்துவிடுவார்களே ! இருட்டிலா உழல்வது! நான் என்று தம்மை கேருவினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது. மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன் என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்ப தாகும். நேரு பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர்! எனவே தான்.அவர் பேச்சை ஏற்க மறுத்து வந்தீர்! இப்போதோ. சொல்வது நான்! சொந்த இனத் தான்! அந்நியன் அல்ல! எனவே நான் சொல்வது கேண் மின் என்ற பொருள்கொள்வது என்றால், அப்போது, ஒரு அடிப்படை உண்மையை. நாட்டுக்கும் உலகுக்கும் அறி விக்க வேண்டும். திராவிடநாடு பகற்கனவு என இவர்களும் பேசுகின்றனர் : நேருவும் பேசுகிறார்; எனினும் இவர்கள் இனம் வேறு-நேரு இனம் வேறு. இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்பட வேண்டும்; அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வு தான் உண்மையானது, தேவையானது; கொள்ள வேண் டியது என்று கூறும் நாணயமாவது இருக்க வேண்டும்; இரண்டும் இன்றி. நான் கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக் கேளுங்கள்: நேரு இதனைச் சொன்னபோது ஏற்கமறுத்தீர்கள் - மறுத்தோம். தவறில்லை. ஏனெனில், நேரு எவ்வளவு பெரியவராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல! நானோ திராவிடன்! எனவே, என் சொல் கேண்மின்!! என்று கூறுவது வெறும் கேலிக் கூத்தாகும். "ஐயன் அழைக்கின்றார்; அகிலம் அறிந்துள்ள ஆற்றல் மிக்கோன் அழைக்கின்றார்! மேதினி கொண்டுள்ள மெய் யெல்லாம் உணர்ந்தவர் காண்! வரலாறு பலவும் கற்றறிந்த பேரறிவாளர்! அவர் காணா நாடில்லை! அவர் உரை கேளா