பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

________________

120 மாந்தரில்லை! அவர் அழைக்கின்றார்! திராவிடம் தனிநாடு என்றெல்லாம் பேசுகிறீர்! பித்துப் பிள்ளைகள்போல் பேதம் பேசலாமோ என்று மெத்த வருத்தப்பட்டு, மேலோன் கேட்கின்றார். உலகமே ஓர் அரசாய், ஆகிவரும் நாட்கள் இவை. இந்நாளில் என் நாடு, என்னுடைய மொழி என்று இயம்பிடுதல் ஆகாது, அறிவீனம் என்கின்றார். அவர் அறியாதவற்றை எவர் அறிவார், கூறுங்கள். ஐயன் அழைக்கின்றார், வந்திடுவீர், சொந்தமுடன். விந்தியமும் இமயமும் விளங்கி நிற்பதுவும், காவிரியும் கங்கையும் கரை புரண்டு ஓடுவதும், பாரதம் எனும் இந்த மணித்திரு நாட தனில்! இந்த உண்மையினை ஏற்றிடுவீர். வாழ்ந்திடுவீர் ! சொந்த நாடு ஒன்று உண்டென்று பேசி நீவிர், தொல்லை வளர்க்காதீர்." என்றெல்லாம் பேசி அழைத்தனரே காங் கிரசார் அப்போதெல்லாம் தோன்றா மனமாற்றம் இப் போது அரும்பும், மலரும் என்று எதனாலே எண்ணுகிறார்? எடுத்துரைக்கத் தெரியாமல்,ஏமாந்தனரோ காங்கிர சார்! இவர் எடுத்துக்கூறும் வகையால் எவர் மனமும் மாறிடுமோ! என்னே பெருந்துணிவு! ஏன் கொண்டார் இப்போக்கு? "இல்லையாமே, அண்ணா! இவர் கேட்பது தமிழ் நாடாம்; இன்றுள்ள நிலைமையிலே அதுதான் ஏற்புடைத் தாம். அது பெறவே முயலுவது அறிவுடைமை ஆகுமாம்" என்று கேட்டிடுவாய்! என் தம்பி, இதனைக் கேள் நீ கூறும் முறையில் அல்ல நமைவிட்டுப் பிரிந்தார்கள் பேசு வது: பிரிவினை தேவையில்லை - பிரியும் உரிமை மட்டும் பெறுவோம் என்று பேசுகின்றார்; முன்பகுதி கேட்டு, காங் கிரஸ் ஏடுகள் இடம் தரட்டும்; பின்பகுதி காட்டி, பெற்றிடு