பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

________________

123 வளவு எமது அறிவாற்றலைப் பாராட்டுகிறீர்களே, எமக்கு ஆதரவுகாட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்கு கிறீர்களே; நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியும் திராவிடநாடு கூடாது என்பதுபற்றியும் பேசு வதை. சிந்தாமல் சிதைக்காமல் மெருகும் மிகக்கொடுத்து வெளியிடுகின்றீர்களே! அங்கனமாயின், ஐயன்மீர் தமிழ் நாடு தமிழர்க்கு எனும் திட்டத்துக்கு ஆதரவு காட்டு வீரோ?" என்று கேட்பரேல். அந்த இதழினர், இடி. இடி யெனச் சிரித்து, "என்ன மதியீனம்! எத்துணை ஏமாளி எண்ணம்! உமது பேச்சை எல்லாம் வெளியிட்டோம். எதற்காக? உமது நிலை, உயர்வானது என்பதற்கா? ஐயே! இதனையுமா, அறைந்திடவேண்டும் நாங்கள் ! ஓங்கி வளர்ந்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகமதை உருக்குலைந்து உடைத்துவிட, உம்மைக் கருவியெனக் கொண்டோ வேறென்ன? அவர் கேட்கும் திராவிடத்தை உடனிருந்து ஆதரித்த உம்மை உசுப்பிவிட்டு அதனையே தாக்கிக் களிப்புப் பெற்றோம். எந்தத் திருவாயால் ஏசி னீரோ நேருதனை, அதே வாயிலிருந்து, அண்ணாவாம் துரை யாம் யார் இந்த அறிஞன்! எவன் தந்தான் இப்பட்டம் எனக்கும் இவனுக்கும் உள்ள ஓட்டென்ன உறவென்ன!- என்று முத்துக்கள் உதிர்ந்தனவே, அவைதாம் எமக்குத் தேவை. அவைதமை எடுத்தெடுத்து அழகழகாய்த் தொடுத்து, அனைவருக்கும் அளித்திட்டோம். அத்தோடு தீர்ந்ததய்யா. எமக்கு இருந்த அரிப்பெல்லாம், அவ்வளவே அறிந்திடுக! திராவிடம் தீது என்று தித்திக்கத் தித்திக்கப் பேசினீர், சுவைத்திட்டோம். அதுகண்டு, நீர் புதுச்சரக்கு இது கொள்க என்று, தமிழ்நாடு பிரிவினை என்று பேசுகின் றீர்- பேரறிவோ? திராவிடம் வேண்டாமென்று சொல்லு தற்கு உள்ள எல்லாக் காரணமும், நீர்கேட்கும் தமிழ்நாடு தனிநாடு என்பதற்கும்தான் பொருந்தும். திராவிடநாடு