பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

________________

127 பக்ரா-நங்கல் நிர்வாக ஊழல். சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு. வெளிநாட்டுக் கடன் சுமை திகமாகி. அழுத்துவது. ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது. நோட்டுப் பெருக்கத்தால். பண வீக்கம் ஏற் பட்டிருப்பது. மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர் அடைவது. வருமான வரி ஏய்க்கும் வன்கணாளரை வீட்டு வைக்கும் கொடுமை. முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத் தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை. எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும் செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது. கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்காத கன்னெஞ்சப்போக்கு. சேது சமுத்திர திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில் இருந்து வரும், உள்ளம் வாட்டிடும்,நிலைமை. ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக் காய் இருப்பதனை. கணக்கு ஆய்வாளர் காட்டி வரும், கொடுமைமிகு சீர்கேடு. கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின் குரல் கேட்டு உதவி புரிய முன் வராது நேரு பெரு மகனார் உள்ள போக்கு.