பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

________________

13 பைத்யக்காரத்தனம் - தமிழ் நாடு போதும் என்று கூறி விடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படு கிறது. கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட் டது என்று பலமாகக் கண்டிக்கிறார்கள். இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல. குற்றச்சாட்டுகளாக. இழிமொழிகளால். கூறு கிறார்கள். மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச் சாட்டுகளைக் கூறுகிறார்களே, அதிலும் மிகமிகக் கேவலப் படுத்தும் முறையிலே, என்று எண்ணி நான் ஆயாசப்பட வில்லை; மாறாக. இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள், சமீப காலத்துக்கு முன்புவரையில், கனிவுடன் மட்டுமல்ல. பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள். அதை எண்ணி மகிழ்ச்சி பெறுகிறேன். முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே, என்று கூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை. ஏதோ, முன் பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசி யிருக்கிறார்களல்லவா ; அதற்கு நன்றி கூறிக்கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது. கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை யென்றால்.கடமையை நிறைவேற்ற முடியாது. பாராட்டியவர்களே. கண்டிக்கும்போது. அதைத் தாங் கிக்கொள்ளும் மனத்திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெறமுடியாத. ஆனால் விலைமதிக்க முடியாத மிகச் சிறந்த பண்பாகும்.