பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

________________

130 உதறிட அஞ்சி ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார் தோழர்கட்கு: சின்னாட்கள் சென்றதும், இதனையும் போட்டிடுவார் மண்மீது-- என்றெல்லாம் எழுதிற்று. அதற்கும் மறுப்பு இல்லை. அச்சம்! அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, ருது, சூழ்ச்சி. ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே, என் கருத்து. தமிழர்,தனி இனம் - தாழ்ந்த நிலையில் இன்றுளர்- அதற்குக் காரணம் வடவர். வடவர் வாழ்த்திட வழி வகுத்ததுதான். இந்திய அர சியல் சட்டமெனும் பொறி. இதில் சிக்கி இருக்கு மட்டும். தலைநிமிர்ந்து வாழ்ந் திடான் தமிழன் எனும் இனத்தான். அவன் மானம் அழிக்கிறார். மொழியைப் பழிக்கின் றார்: வாழ்க்கை வழியை அடைக்கின்றார். வளமெல்லாம் வடக்கேதான்: வாட்டம்தான் தமி ழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்புமட்டும், தன்மானமும் இல்லை. தழைத்திடப் போவ தில்லை. வடநாட்டு ஆதிக்கம், அழித்திடவே, இருக்கின்றேன்; வந்துதிவீர் என்னோடு; தனி அரசு காண்பதற்கே!! என்று இவ்விதமெல்லாம். எடுத்துரைக்க முன்வந்தால், ஏது ஏடுகளிலே இடம்!! எனவேதான் அவை இன்று. வெளியே, காணோம். அம்மட்டோ, தம்பி! திராவிடம் என்றால் கசப்பு-ஆயின், வடநாடு எனின், இனிப்பே யன்றோ.காண்கின்றனர். எனவே தம்பி! எனைவிட்டுப் பிரிந்தனரே, என் செய் வேன் என்று எந்தன் மனம் பட்டபாடு மிக அதிகம் என்றா