பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

________________

15 இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக் கொண்டு அல்ல, பல்லாயிரவர் Ain 190 மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில்! இப்போது, சட்டசபையில் இறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார் கள் என்று பேசினால், தான் பிரிக்காமல் என்ன செய்வது. தம்பி! நீநான் சொல்லேன்? சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப்பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ்காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப் பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர்! இப்போது, இப்படி! அதற்கு ஈன் என்ன செய்ய!! சட்ட சபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே. என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியாவது, சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியுமா! அவருக்குத் நமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒருசமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாரயட்ட வைத்ததுபோலும் என்று எண்ணிக் கொள்கிறாயா,தம்பி! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார். 'அன்று ஒருநாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந் தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின் மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லா மல்,குடரூ நாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த