பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

16 நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன, என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே என்று மூடி வைத்திருக்கிறார்களோ. அத்தனை திட்டங்களை யும் பெயரோடு, விவரங்களோடு. நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லிலிட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வையோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார்-இவர் எல் லாத் திட்டங்களையும் சொல்லிவிட்டார் - வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக்கொண்டு எல்லாவற் றையும் சொல்லிவிட்டார்' என்று பெருமூச்சோடு தொடங் கிப் பதில் சொல்ல ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக் கத்தக்க வகையிலே தான் செயலாற்றுவார்கள். நாம் பெறு கின்ற இடம்,நம்முடைய ஆசானுடைய திறன் அது என் பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடறி விழுந்தோம். தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம் ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை." எப்படித் தம்பி ! பாராட்டுதல்!! கேட்போர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல, இதை 'நமது சம்பத்து' எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப் போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்ட சபை உறுப்பினர்களைப்பற்றி, 'சுத்த மோசம் என்று கூறு வதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள். அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன்