பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

________________

21 கவலை கொள்ளவில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண் அந்த இலட்சியத்திலிருந்து நாம் வழுக்கிவிடக் கூடாது - பேரம் பேசுவது - குறைத்துக் 3கட்பது— சாயலைக் கேட்பது-இலட்சியவாதிகளின் போக்காக இருத் தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத் திலே உட்கார்ந்துகொண்டு வேண்டுமானால் காரியவாதி பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம். இறுதி மூச்சு உள்ள வரையில்! இதை வெறி என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை! இப்படிச் சிலர். நாளைக்கும் தமக்குச் சாரகமாக்கிக் கொண்டு, கொடுத் ததைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும் பரவாயில்லை! இலட்சியம் நமக்கு! விடுதலை, பகுதி பகுதி யாகத் தரப்படட்டும் என்று பேசுபவர். இலட்சியவாதிக ளாகார் - என்று, நான் படித்த ஏடுகள் கூறுகின்றன? இந்த நம்பிக்கையுடனேதான் தோழர் சம்பத் லால் குடி மாகாட்டிலே பேசி. கேஃபோர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினர் ஆக்கினார். அத்தக் கொந்தளிப்பு. சிவாஜி கணேசனை, மேடை ஏறி, அண்ணா ஆணையிட்டால், நாள்பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு. போரில் ஈடுபடுவேன் என்று பேச வைத்தது. தோழர் சம்பத், நம்மைவிட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றிய உரை. அவரை நம்முடன் பிணைத்துவைத்திருக் கிறது. அது இது: இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகி யோர் சிறையிலிருந்தபோது வேலூரில் தமிழர் மாகா டொன்று பன்னீர்ச்செல்வம் அவர்கள் தலைமையில் நடை கொ- 2