பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

________________

22 பெற்றது. அதில் எஸ். எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்துகொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத் துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம் மாநாடு, தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறைசென்ற தலைவர்கள் மீண்டனர். மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்தீர, மலையாள, கன்னடத்தோழர்கள். வட வரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் என் பிரியவேண்டும்? ஆந்திரம். கேரளம். கர்நாடகம் ஆகிய திராவிடமொழிகள் பேசும் மகாணங்களும் பிரிந்து தீரவேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை' என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப் படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுயநிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து இணைத்து' அமைக்கும் திராவிடக் கூட்டாட்சியைப் பெற இயக்கம்: இனிப்போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. "பிள்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்கவேண்டும் என்பது நமது இலட்சியமாக அமையவேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள். சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட் டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டுவந் தார். ஒன்று, ஐஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்றவேண்டுமென்பது; மற்றையது, கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர். சர் போன்ற பட்டங் களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக்கூடாது என்ப தாகும். கட்சியில் இருந்த ஆலை அரசர்கள், செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.