பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

________________

"இந்த 27 நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வெள்ளையன் வருவதற்குமுன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (Politicat unit) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது, ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் பெயராகவே திகழ்ந்து வந்திருக் கிறது. எப்படி, பல தனித்தனி நாடுகளைக்கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்குப் பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக் கிறோமோ, அதைப்போல் இந்தியத் தீபகற்பம் என்பது ஆசியாக்கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர. சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை. "வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, அய்தராலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர் களைச் சதி செய்தும், வென்றும், இந்தியத் தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோது தான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்கு கிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை. நமக்கும் வடவர்களுக் கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில் மொழி யில், முன் வரலாறு நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்று படுத்தி ஓரினமாக்கக்கூடியது எதுவும் இல்லை. வெள் ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில்கூட அது ஏற்பட