பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

________________

35 -5.7 607 நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் திராவிடநாடு திராவிடருக்கே' என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை. வரிகளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண் ணிக்கொள்வேன்." தம்பி! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவ னப்படுத்தியவர், இன்று சொல்வது என்ன? அதுவும் 7-4-61-ல், தி.மு.கழக வரலாற்று வெளியீட்டு விழாவை கடத்திவைத்துவிட்டு, 9-4-61-ல் தி.மு.கழகத்தைவிட்டு விலகி, 19-4-61-ல் திராவிடநாடு பகற்கனவு: தமிழ்நாடு தான் பலிக்கும் என்று பேசுகிறார். உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மனமாற்றம் - திடீர் முடிவு? மனமார நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா? இல்லை ! முதலில் விலகல்---பிறகு விளக் கம் - பிறகு புதுக்கட்சி- புதுக்கொள்கை! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிட வைக்கக் கூடிய தல்லவா / தமிழ்நாடுகூடப் பிரிய ருடைய கட்சியின் குறிக்கோள். வேண்டுமென்பதல்ல, அவ தமிழரசு- தமிழர் தனி அரசு - தனித் தமிழகம் இவை அல்ல. வேண்டும்போது பிரிந்து போகும் உரிமை, சட்டப்படி தரப்படவேண்டும். உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம்-