பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

________________

37 இந்தக் கலைஞர்கள்! மேடைதோறும், எப்படி எப்படிப், படக் காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி. நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப்பற்றி, அரிசி நிலைபற்றி, அங்காடிப் போக்குப் பற்றியெல்லாம் சிந் சிக்க ஓட்டாது தடுத்துவிடும்,பொல்லா தவர்களோ ! எந்தக் கலைஞரும், கலை பற்றி அல்ல. கழக நிலைபற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும் என்று, கூறு வது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது. பிடிக்கவில்லை என்றால். என்ன செய்யலாம்? மற்றவர் களுக்கு இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்ப தைக் கண்டறியலார்; கூடிப் பேசலாம்; சிக்கல் போக்க லாம்; செம்மைப்படுத்தலாம். செய்தாரா? இல்லை! கலைஞர்களைவிட அவர்களுடன் தொடர்புகொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர்மீது உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது. திட்டம் எதனையும் காணோம். பேசத்தெரியாது. எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொரு ளாக இருக்கும் நிலைமட்டும் போதும் என்று உள்ள கலைஞர் களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால், நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர்! தம்பி! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக்கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கை எழுத்திட்டுத் தமது தென்ற’லில் தீட்டியுள்ள அழகு நடை தவழும் தலையங்கம் இது. அது, இதோ! மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன் னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் கொ-3