பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

________________

38 தங்களிடம் ஓட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைந்தனாயினும். ஓவியனாயினும் அலுவலக் கூறியறயினும் அவனது எண்ணத்தில் பொது நலம் நிறைத்திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார் கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலைமிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனையுள்ள எவனும் மக்களால் ஒளிபொருத் திக் காட்டப்படுகிறான். "இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறக் திருப்பதற்குக் காரணம் இதுதாள். இவர்களிலே சிலருக் குத்தான் மக்களோடு ஓட்டிப்போகும் முறை தெரிந்திருக் கிறது. எங்கெங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பு தரித்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாதவர்கள் என்ன தான் மறுத்துரைத்த போதி லும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர் கள் எங்காளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுய சிந்தனை இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால், அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக்கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொதுநலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்கமுடியும். "கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும்பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதன மாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். களினர் பண்பு இல்லாமல்,