பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

________________

. 39 ல்ல வறட்டுத்தனமாகக் கருக்கைத் தொடுத்து, கலையைக் கருத் துச் சாதனமாக்குவதில் வெற்றி பெறமுடியாது. பொழுது போக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்லவேண் டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப் படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக்கொண்டு. அந்தக் கதையில் வரும். அங்கங்களைக் கதைப் போக்கிலேயே விட்டு. சந்தர்ப்பங்களை மோதுவகன் மூலம் ஒரு கருத்தை உருவாக்குவது நல்ல கலைக்கு அழகாகும். பொழுதுபோக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாரும் இப்படி உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். அண்ணாவின் வேலக்காரி,' கருணா திெயின் பிரா சக்தி' இவை இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே. இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகளின் நாடோடி மன் னன்'. ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந் சவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வரு கிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு. இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து மக்களோடும் ப உறவாடி வருவதால் மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள். "இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக் கிருர்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலி வும் பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை. கழகம் என் றால் என்ன? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர்காலத்திலும் உறுதியான தொடர் புடையது. அதனால்தான் கழகக் கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள்.