பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

________________

40 "அண்மையில், மதுரையிலும் சென்னையிலும் நடை பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூற லாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கலாள் பரிசளிக் கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல் கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார் களே தவிர, திறமைக்கல்ல. இதனைச் சென்னையில் நடை பெற்ற நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பீட் டார். ஆம்; அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். "வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்துகொண்டுதானிருக் கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக்கொள்வோம். என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கை யாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நர்மைப் பலவீனப்படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்துவிடுவதோ அவர்களால் ஆகாது. தங்களையாவது க்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால், அதுவும் நடக்காது. சென்னையில் 'நாடோடி மன்னன் விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான், மக்கள் கலைஞர் களாக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆம்; காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்! வாழ்க மக்கள் கலைஞர் !' அதுமட்டுமல்ல, தம்பி! திராவிட முன்னேற்றக் கழ கத்தினர், திரைக்கதையிலேயும், வசனத்தின் மூலம் கருத் துகளைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்ட மன்றத்துக் குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம், நம்முடைய ·