பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

________________

41 இரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க அதே 'தென்றல்' இதழில் வெளியான மற்றுமோர் பகுதியை யும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டுவருகிறேன்: "தி.மு.கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு, நிதி யமைச்சர் சுப்பிரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை, வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார் கள். நிதியமைச்சர் சுப்பிரமணியம் கருதுவதைப்போ கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல: கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட் டில்.நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார் கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத் திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை. வசனம் எழுதுவதிலும் ஏதோ 'சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணரமுடியும். கதை வசனம் எழுவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப்போடுவது தவறு. ஒருவேளை தி.மு.க. -வைச் சேர்ந்தவர்கள் கலைத் துறையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும், தி.மு.கழகத் நினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கின் றனர்' என்ற மெய்யுரையைத் தெரிவித்தாகவேண்டுமே என்பதற்காக நிதியமைச்சர் கதை, வசனத்தைக் குறைத்துப் பேசக் கூடும். "தமிழகத்தில், நாடகங்கள் மிகக்குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறிக் நடிக்கின்றன. போட்டி கள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்