பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

________________

42 டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்பிரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழி லுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஓப்பு தன் தந்திருக்கிறாரென்றால். உண்மையிலேயே அவர் கதை. வசனத்தைக் குறை கூறுகிறாரா, அல்லது அந்த ஆற்றல் தி.மு.க.-வினர் இடத்திலேயே நிறைந்துவிட்டது என்பதற் காகக் குறைத்துப் பேசுகிறாரா என்பது மக்களுக்குத் தெரிந் தாகவேண்டும். "தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமினா சர்மா அவர்கள். தமிழகத்தில் நாடகங்கள் குறைந்து விட்டனவே என்று மெத்த வருத்தப்பட்டுச் சென்ற கிழமை: பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த பி. வி. இராசமன்னார் அவர்கள், 'கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் கதை வானம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். வரசியல் கடினம் தான். அதற்காகக் கதை, வசனம் எழுதுவது இல வானதாகிவிடுமா? "ஆரம்ப காலத்தில் 'கல்கி ஒரு படத்திற்கு வசனம். எழுதியபோது அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். 'இதுவன்றே அமர கிருஷ்டி என்றார்கள். படம் விழுந்தது. பாராட் டுக்கள் காற்றோடு கலந்தன. தன் கரம் பட்டால் கரி யாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும் போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லா மல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில் பொதுமக்கள் உள்ளச்