பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

________________

43 திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என் னென்ன செய்தார்கள்? "நாடகங்கள் நடத்தவில்லையா? கே. பி. சுந்தராம் பாளைக் கேட்டால் தெரியும்! "தலைவர்கள் நடிக்கவில்லையா? சத்தியமூர்த்தி நடித் திருக்கிறார்! "பாடல்கள் இயற்றவில்லையா? பாரதியார் பாடல்கள் என்ன குப்பையா.கூளமா? அத்தனையும் அந்நிய ஏகாதி பத்தியத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா! "நாடகம், இலக்கியம் அவசியம்தான் ; ஆனாலும், அவர் கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக் குயில் சரோஜினிதேவியார் கவர்னராகப் பணி புரிந்ததையும், நாவல் நாடக- ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும்,சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்ன ராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வி யமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும், சுப்பிர மணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர, வேறு பொரு ளில்லை.' அவரும் கலை உலகினர்; எனவே, அவ்விதம் பேசுகிறார். என்று வாதிடத்தோன்றும். சரி, தோழர் சம்பத்தையே அழைக்கிறேன்: கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தை யும், இந்தப் பிரச்சினையில்! கழக மாநாடு! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! காங்கிரசார் முகத் திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார் ; கேண் மின்!