பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

________________

45 மறைத்துவிடட்டும். அதனால் குடி முழுகிப் போய் விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை நாமே மறந்துவிடாமல் இருந்தால் அது போதுமானது. "தி.மு. கழகம் வளர்வதற்குக் காரணம், நாலைந்து சினிமாக்காரர்கள் இருக்கிறார்கள்; அதனால்தான் அது வளர்கிறது' என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில் இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை- மாறாக, தொல்லைதான் அதிகம்." இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது 6 - 6'-59-ல் தோழர் சம்பத் சொன்னார். இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசி வருவது தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாகவேண்டும் என்ற உத்வேகத்தில்' இதைச் சொன்னார். [ இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத் தாலேதான், அண்ணாதுரையின் அகலம் என்ன? உயரம் என்ன? என்பதுபற்றியும், நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்? என்ற ஆராய்ச்சியிலே யும்,கருணாநிதிக்குக் கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத் தார்கள், எப்போது கொடுத்தார்கள். ஏன் கொடுத்தார்கள் என்கின்ற ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.' தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்தி விடவில்லை. என் பேச்சு, எழுத்து, அதிலுள்ள அடுக்கு மொழி,உவமை, அக்கு உவமையிலே உள்ள தன்மை, சுவை இவைபற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன்