பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

________________

50 என்னால் ஆகுமா அப்படி அடித்துப்பேச! அதே நேரத்தில் திராவிடநாடு பகற் கனவு என்று மாறிப் பேசத்தான் முடியுமா? நான் சாமான்யன் ! அசகாய சூரத்தனமாகப் பேசுவ தென்றால் எனக்கு அச்சம்! அதுபோலவே. இவ்வளவு காலம் இலட்சக்கணக்கானவர்களிடம், ஊட்டிய நம்பிக் கையை மறந்து, எழுச்சியைத் துச்சமென்று மதித்து, எதனை யும் எப்போதும் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம் என்று துணிந்து, கொண்ட கொள்கையைக் குப்பை என்று கூறிவிடமுடியாது ! நான் மெத்தக் கூச்சப்பட்டவன் !! திராவிட நாடு பகற் கனவு என்று இப்போது அவர் கூறுவது கேட்டு உனக்கு எவ்வளவு கோபம் வருகிறதே. அதே போலத்தான், அப்போது வா ஒருகை பார்ப்போம் என்று அறைகூவல் விடுத்தபோது காங்கிரஸ்காரர்கள் கோபித்துக்கொண்டனர். இப்போது திராவிட நாடு பகற் கனவு என்று அவர் கூறக் கேட்டுக் காங்கிரசார் எவ்வளவு குதூகலப்பட்டு, இவரல்லவா அறிவாளி! மாயையிலிருந்து விடுபட்ட மாவீரர்! உண்மையை உணர்ந்த மேதை ! என் றெல்லாம் கொண்டாடுவதாகக் கூறுகிறார்களே. அதே போலத்தான். தேர்தல் களம் புகுந்து, திராவிட நாடு பிரச் சினைக்கு, நாம் பெருமைப்பட்டோம். பூரித்தோம். உச்சிமீது வைத்துக்கொண்டாடினோம். ஆக இதிலே யாருக்கும் கஷ்டம் இல்லை! ஆணித்தரமான பேச்சு! அடித்துப் பேசும் போக்கு! அஞ்சா நெஞ்சம் காட்டுவது!!-இவை, கைவசம் உள்ள விலை சரக்கு-ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் இடத்தில் போகிறது!! கொலைக் குற்றம் செய்தவனையும் தப்ப வைக்க வாதத்திறமை பயன்படுகிறது! குற்றமற்றவனைக் கூண்டில் தள்ளவும் சில வேளைகளிலே திறமையைப் பயன்படுத்து கிறார்கள். அரசியலிலுமா? என்று கேட்கிறாய்! ஆமாம்.