பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

________________

53 மன்ற நடவடிக்கை ஏடுகளிலே இருந்து தான்! இன்னும் கூட இருக்கிறதே. நிரம்ப என்றேன். அவர் கோபித்துக் கொள்ளவில்லை; மாறாக, அந்தக் கருத்துக்களைத் தான் இப் போது வலியுறுத்த முடியாதபடி அமைச்சர் பதவி தடுக் கிறது என்பதைப் பார் வையால் காட்டினார். ஆக, நான் அமைச்சரைப் பார்க்கும்போது. அவருக்குத் தான்.கூச்சமாக இருந்தது--வெறும் உறுப்பினராக இருந்த போது, தொழிலாளர் உரிமைக்காக, வீரதீரமாகப் பேசி னோம். இப்போது இப்படி ஆகிவிட்டோமே!- என்ற கவ லையும், வெட்கமும்தான் அவரைப் பிய்த்துத் தின்றது. திராவிடநாடு பிரச்சினையை வைத்துத் தேர்தலே நடத்தி விடுவோம்; நான் தயார்! நீங்கள் எப்படி? என்று அறைகூவல் விடுத்தவர், திராவிடநாடு பகற்கனவு என்று ஏசும் நிலை அடைந்த கோலத்தில், அமைச்சர் அவரைக் காண நேட்டால்! பரிதாபமாகத்தான் இருக்கிறது. நினைக் கும்போதே!! 1958 ஜனவரி 28-ல் சென்னையை அடுத்த பூவிருந்த வல்லியில், அமைச்சர் வெங்கட்ராமன் பேசிய பேச்சுக்குத் தோழர் சம்பத் விடுத்த அறைகூவல் அறிக்கையுடன். 1961 ஏப்ரல் 19-ல் ரொளிகாடு படீர்கனவு என்று அவர் அவருடைய உலகுக்கு விடுத்துள்ள அறிக்கையை ஒப்பிட் டுப் பார்த்தால்.....! சே! எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது! அந்தச் சிவாஜியா, நான்...? நினைவிருக்கிற தல்லவா, தோழர் சம்பத் சிவாஜி வேடடத்தில் பேசிய உருக்க மான வாசகங்கள் {! “அஞ்சா நெஞ்சன் எங்கே? பஞ்சையிடம் பணியப் போகும் நான் எங்கே?...... வீழ்ச்சிதான்! வேதனைதான்! கோ-4