பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

________________

. 56 . "ஆந்திரா சட்ட மன்ற உறுப்பினர் வாவில்ல கோபால் (ரெட்டி) என்பவர், அந்தந்த மாநிலங்களுக்கு அதிக அதி காரம் வேண்டும்' என்றும், தனித் தனியே இராணுவம் வேண்டு மென்றும் பேசியிருக்கின்றார்; இப்படிக் காங்கிர சிலிருந்து நம்மை நோக்கி வருகிறார்களே தவிர, யாரும் இங் கிருந்து அங்கே செல்லவில்லை!" நம்மை நோக்கி வருகிறார்கள் -என்று 1960-ல் சொல்ல முடிகிறது - அந்தத் தித்திப்புப் பேச்சுப் பெற்றுத் திராவிட மக்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில், எதெதற்கோ சச்சரவு என்று கூறிக் கொண்டிருந்தவர்கள். திடீரென்று, உங்களுக் கும் திராவிடநாடு என்னும் இலட்சியமே வெறும் கனவு- அடைய முடியாதது- என்று தோன்றுகிறது என்று கூறி விட்டு. இத்தனை காலமும் பேசிக் கொண்டிருந்ததற்கு முற் றிலும் மாறாகப் புதிய கொள்கைகளைக் காட்டுகின்றனர். கொள்கைகள், மக்களின் இதயத்தில் இடம் பெற்று விட்டன ; இவர்களோ, தாம் இதுவரை பேசி வந்தது உதட்டளவே என்று துளியும் கூச்சமின்றி, மக்கள் என்ன எண்ணுவார்கள் என்பது பற்றிக் கவலையற்று வேறு பேசுகிறார்கள். பிரிவினை வேண்டாம். திராவிடக் கூட்டாட்சி வேண் டாம், சமதர்மத் திட்டம் வேண்டாம் என்றல்லவா கூறு கின்றனர். டாடாவும், பிர்லாவும் கூடச் சமதர்மம் கூடாது. தேவையில்லை என்று பேசக் காணோம்-பேச வெட்கப்படு கிருர்கள் - புதுக் கட்சியினர் திட்டவட்டமாகக் கூறுகிறார் கள். சமதர்மம் போன்ற இலட்சியத்துக்கு நாங்கள் கட்டுப்படப்போவதில்லை- தொழில் வளர்ந்தால் போதும்-- எந்த முறையிலேனும் என்று.