பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

________________

66 வேண்டும்? இதுதான், மக்கள் ஆட்சிக்கு அச்சாணியா? மாண்புள்ள செயலா? கூடிப் பணியாற்றுவோரிடம். கொள்கை பற்றிப் பேசிடக் கூச்சம் ஏன்? தயக்கம் ஏன் ? அவர்களைத் தம் வழி கொண்டு செல்லத் தக்க ஆதாரங்கள், விளக்கங்கள் இருப்பின், ஏன் அந்த முறையைக் கையாண் டிருக்க கூடாது? ஏகாதிபத்தியவாதி கூட அல்லவா. தான் தர இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறித்து, பெறு வோரிடம் கலந்து பேசுகிறான? அத்த அளவுக்கும் கூடவா. பொறுப்புணர்ச்சியைப் பூரணமாகக் கொள்ளக் கூடாது? கொண்டனரோ? முதலில் விலகல்- பிறகு விளக்கம்- அடுத்தது திட்டம் - அதற்குப் பிறகு கொள்கை!!- இப்படி யாமே இலக்கணம்! அக்கறை கொள் வோர். இதனை எப்படி ஏற்க முடியும்: ! திகைக்கிறேன், நம்பீ! திகைக்கிறேன். தம்பி! திகைக்கிறேன். திடீரென, தென்னகம், தெற்கு, கிராவிடம் என்ற சொல் கசப்பாகிப் போவானேன்' பொருளற்ற சொற்கள் இவை என்று புது வியாக்யானம் கூறுவானேன்.......? வடக்கு-தெற்கு என்று வறட்டுக் கூச்சலிடுகிறார்கள். என்று நம்மைக் காங்கிரசார், கேலியாகக் கண்டித்த போது. தோழர் சம்பத் அவர்கள் எப்படி எப்படி ஆத்திரம் பட்டார்! அரிய பெரிய விளக்கம் தர முற்பட்டார்! இப் போது அவரேவா அவருடைய வாதங்களைச் 'சொத்தை என்று பேசுவது? காலத்தின் கோலமா கோபத்தின் விளைவா? அவருடைய பொருள் செறிந்த வார்த்தையைச் சொல்வதானால். கொள்கைக் குழப்பமா? என்ன காரணம் இதற்கு? தம்பி ! நீயும் நானும், வடக்கு-தெற்கு என்று பேசு வது தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம்.