பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

________________

82 என்ன அண்ணா! கனவுக்கே ஒரு விளக்கம் கொடுத்து விடுவாய் போலிருக்கிறதே என்று என்னைக் கேட்கா3த தம்பி! இது என் பேச்சல்ல, தோழர் சம்பத் அவர்களின் பேச்சுத்தான். நெடுங்காலத்திற்கு முன்பு நிகழ்த்தியது அல்ல; 37-6-59-ல் அன்று என்னைப் பாராட்டிப் பேசினார் அவர், எனக்கு வயது 50 என்பதற்காக. அப்போதுதான் கனவு என்கிறார்களே. திராவிட- நாடு பிரச்சினையைச் சில பைத்திய காரர்கள். அவர்களின் மரமண்டையில் படும்படி பேச வேண்டும் என்று அவருக்குத் தோன்றவே, சந்திரனைப்பற்றி முன்பு கண்ட கனவு, 'ராக்கெட்' கண்டு பிடிப்பு வரையில், அறிவாற்றலைக் கொடுத்தது என்று விளக்கினார்.விளக்கி விட்டு, எனக்கும் சில அன்புரைகள்! "அண்ணா அவர்கள் அப்படிப்பட்டதொரு அரிய கன வைக் காண்கிறார். அந்தக் கனவு கனவாகம் உழைத்தால், நம் காலத்திலேயே அதைச் சாதிக்கலாம்." மனமார கனவு காண்பதுகூடத் தேவைதான் என்று தத்துவ விளக்கம் தந்தவரே. திராவிட நாடு வெறும் கனவு என்று ஏன் பேசுகிறார்? சலிப்பு! அலுப்பு! இயற்கையாக எழக் கூடியது! கட்டுப்படுத்தாவிட்டால் மனம்: குழம்பும். மார்க்கம் வேறுபடும், மதிப்பீட்டுத் திறமையும் மங்கி மடிந்துவிடும். "சிலருக்கு இதிலே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அலுத்துப் போனதால், தாங்கள் அமைந்த வேறு ஒரு கோட்டை கட்டட ஆரம்பித்து விட்டார்கள். திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்னவர்களுக்கே அந்த இலட்சியத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. கேரள மும், கர்நாடகமும், ஆந்திரமும்,தமிழகமும், சேர்ந்து திராவிட நாடு என்று என்று முழக்கரிட்டவர்கள், இன்று தமிழ் நாடு மட்டும் போதும் என்று பாதைமாறி எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார்கள்." அன்று அவர்