பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

________________

83 கூறிப்பிட்ட பாதை மாறி எங்கோ அலைந்து கொண் டிருக்கும்.நிலை, தமக்கே இவ்வளவு விரைவாக, திடுக்கிடத் தக்க முறையில் ஏற்படும். என்று அவர் எண்ணியிருந்திருக்க முடியாது. அன்று இரக்கம் கலந்த குரலில் பாதை தவறிச் சென்றிருக்கிறார்களே! என்று யாரை எண்ணிக்கொண்டு. இவர் பேசினார்? பெரியாரை! வெகு விரைவில் நமக்கும் பாகை தவறி அலையும் நிலை ஏற்படப் போகிறது என்பது அறியாமல்! - பாதை பதிதாக வருத்துக்கொண்டேன் என்று பின் பற்றுவோர் கண் மூடிக்கிடக்கும் வரை போலாம். ஆனால் பெரியார்.இதே காரியம் செய்தபோது, அவரைக் கேலி செய்துவிட்டு, இன்று இவரே. அதுபோலாகிவிட்டதுடன்- அதற்கு ஒரு ரமாதானம் தேடிக்கொள்கிறாரே, என்றுதான் எவரும் கூறுவர் - பரிதாப்படுவர்! பெரியாராவது தமிழ் நாடு போதும், என்று அளவைக் குறைத்துக்கொண்டார்! வகையை அல்ல! வடநாட்டுத் தொடர்பு அறவே ஆகாது என்று கூறுகிறார். அகில இந்தியா பேசுவோரைக் கங்காணிகள், நுரோகிகள், அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்றெல்லாம் கர்ச்சித்த ஆற்றல் மிக்கவர், தமிழ் காடு அகில இந்தியாவிலேயே இருக்கும் -ஆனால் பிரிந்து போக விரும்பினால், அதற்கு உரிமைபெற்று இருக்கும், என்று பேசுகிறார் -- பெரியார் போலத் திட்ட வட்டமாக, வட நாட்டுப் பிடிப்புக்கூடாது என்று கூற அச்சம். கூச்சம், தயக்கம், ஏனோ? அளவைக் குறைத்துக்கொண்டதற்கே, பெரியார், பாதை மாறி எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார் என்று கேலி பேசினாரே.- ஏன்? அதற்கும் அவரே பதில் அளிக்கட்டும். "அரசியல்களிலே தன் கொள்கைகளை மாற்றிக் கொள் பவர்களில் இரண்டு ரகம் உண்டு. அவசரக்காரர்களாக இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தன் கொள்கையை மாற்றிக்