பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

________________

85 பது: தொடர்பு எனக்கு எந்த அளவு? என்ன வகை? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன? ஒரு கணக்குப் பார்க்க லாமா என்று கேட்டுப் பாரேன்--குறை கூறுவோரை. புதிய வீடு வாங்க-அலங்காரச் சாமான்கள் வாங்க- அனந்த ராம் தீட்சதரின் காலட்சேபம் கேட்க-வாடகைப் பணம் முறைப்படி பெற--வழக்கு வேலைகளைக் கவனிக்க- செலவிடும் நேரம், உண்டா, எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும்நேரத்தில் ஒரு பங்குகூட இராதே. எனக்குள்ள கலை உலகத் தொடர்பு! நாள் தெடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள் -ஒன்று எம்.ஜி.ராமச் சந்திரன் நடிப்பது-மற்றொன்று கே ஆர். இராமசாமி, எஸ். எஸ். இராஜேந்திரன். எம். ஆர். ராதா இரண்டுக்கும் நானல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப் பவன்; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவு தாள், என் தொடர்பு! மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணி நேரம் ! எடுத்த படத்தைக்கூட தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம்-நான் சரிவரப்பார்க்கக் கூட இல்லை! இது என் தொடர்பு! இது கந்த வேலையை என்ன பாதித்து விட்டது? துளியேலும் உண்மையான மனக்குறை யிருந் தால் விளக்கலாமல்லவா? போகட்டும்-இதைக் தவிர, இனி, என்றென்றும் கலைக் தொடர்பு வேண்டாமென்று, நம்பி! உனக்குக் தோன்றினால், யோசனை என்ன? கட்டளை யிடு ! ஏற்றுக் கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற் குள் ஒரு படத்துக்காவது, கதை எழுதுங்கள் அண்ணா! என்று என்னிடம் சொன்னவாரா நாட்டினரைப் பார்த்து, சேச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுது கிறானே - என்றா பேசுவது? அதுதான். மனக் குமுறலுக்குக் காரணம் என்றால், தம்பி! ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும் கொ-6