பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

________________

87 "கலைஞர்களின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நாட்டு மக்களிடம் சென்று ஓட்டுகேட்டவர்கள்தான். இன்று நம்மைப் பார்த்து நடிகர்கள் என்று குறை கூறு கிறார்கள் - விதவை, கன்னியைப் பார்த்துக் கேலி செய்வது போல! . "இதை எல்லாம் தெரிந்து கொண்டிருப்பதால்தான். இவர்களுடைய மானம் சந்தி சிரிக்கும் வகையில், அண்மை யில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் ஊழியர் கூட் டத்தில் பேசின நேரு பண்டிதர். அரசியல் துறைமட்டும் அல்லாமல், ஏதாவது பிழைப்பதற்கு கௌரமான தொழில் வைத்திருப்பவர்கள் மட்டும் அரசியலில் வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறியிருப்பவரைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள்தான் வேறு ஒரு தொழிலில் ஈடுபட் டிருக்கும் மக்களைப்பார்த்துக் கேலி பேசுகின்றனர். 'எனவே, அரசியல் துரையில் ஈடுபட்டவர் வேறு தொழில் களில் ஈடுபடுவது பலவீனமல்ல. அது தேவையானதுதான் என்பதை நேரு பண்டிதர் விளக்கியிருக்கிறார். எனவேதான் காலை முதல் இரவு வரை உண்ணுவதைத்தான் தங்கள் தொழிலாகக் கொண்டில்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழிலையும் தெரிந்து கொள்ளச் சொல்கிறார் காங்கிரஸ் காரர்களை தேரு பண்டிதர். "திராவிட முன்னேற்றக் கழகம் நல்ல நடிகர்களையும் கலைஞர்களையும், அரசியல் பொருளாதாரத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களையும், இசைவாணர்களையும், திறமை மிக்க ஓவியர்களையும், சிற்பிகளையும், குத்துச் சண்டையில் தேர்ந்தவர்களையும் - இப்படி வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றவர்களைக் கொண்டு விளங்கு கிறது. இங்கு அரசியலை மட்டும் நம்பித்தான் வாழவேண்டு மென்ற நிலையில் யாரும் இல்லை.