பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

________________

91 சிவஞான கிராமணியார் நடத்துவது ஒரு கட்சியா? என்று கேட்டுக் கேலி செய்வார்; கை தட்ட வேண்டும் களிப் புடன்; சுண்டைக்காய்க் கட்சி நடத்தும் சிவஞானத்தா ரிட ம் தி. மு. கழகத் தலைவர் போய்ப் பேசலாமா? பேசி. நமது கழகத்தின் தரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா? என்று கடிந்துரைப்பார்; கைபிசைந்து கொண்டு நிற்க வேண்டும்; பிறகு சிவஞான கிராமணியாருடன் கூடிப் பேசுவேன் என்பார்; அதுதான் முறையான 'ராஜதந்திரம் என்று சொல்லிப் பாராட்ட வேண்டும். பத்திரிகை நிருபர்கள் மெத்தக் கெட்டவர்கள். அவர் களைக் கிட்டவே சேர்க்கக் கூடாது என்று சொல்லுவார்: ஆமாம் போட வேண்டும்; பிறகு ஓர்நாள் பத்திரிகை நிருபர் களை நண்பர்களாகக் கொள்வார்; அவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை என்பார்; ஆமய்யா ஆமாம்! என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஆடம்பர வாழ்க்கை கூடாது என்பர்; அப்படி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவது கட் சிக்கே இழுக்கை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறுவார்; அரை ஆடை அணிந்த அண்ணலின் மறு பதிப்பு என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டும்; அடுத்த சில தினங் களில் அழகான மாளிகையில், அலங்காரச் சூழ்நிலையில், ஆடம்பரமான கொலு நடத்துவார்; விருந்துகள், வைபவங் கள் நடைபெறும்; இதுவா ஆடம்பர ஒழிப்பு என்ற எண்ணம் தோன்றினாலும் அடக்கிக் கொண்டு ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பார். பாராட்ட வேண்டும். அவருக்கு எவ்வெப்போது எது எது சரி என்று, முறை என்று படுகிறதோ, அதை நாம், கண்டறிந்து ஏற்று நடக்க வேண்டும். எது எப்போது, அவருக்குப் பிடிக்காது என்று அறிவிக்கப்படுகிறதோ அப்போதே நாமும் அவை களை, ஒதுக்கி விட வேண்டும். இவ்வளவையும் அவர் கூடிக்