பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கோகோ ஆட்டம்


ஆங்காங்கே போட்டிகளும் நடத்தப் பெறுகின்றன. மாநிலங்களுக்கிடையேயும் ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் எனும் வகையில் பிரித்துப் போட்டிகளை தேசிய அளவில் நடத்துகின்றனர்.

1960-ம் ஆண்டிலிருந்தே மாநிலங்களுக் கிடையேயான போட்டிகள் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. அத்தகைய போட்டிகள் நடைபெற்ற இடங்களையும், வெற்றி பெற்ற மாநிலங்களின் பட்டியலையும் கீழே தந்திருக்கிறோம்.

ஏறத்தாழ 17 ஆண்டுகள் போட்டிகள் நடைபெற்றாலும், இதுவரை தமிழ்நாடு சிறப்பான இடத்தைக் கூடப் பெறவில்லை என்பது உண்மைதான். என்றாலும் நமது மாநிலத்திற்குரிய மேல்நிலை வர நாமெல்லாம் ஒன்று சேர்ந்து உற்சாகமாக உழைக்க வேண்டும் என்ற உயர்ந்த நினைவுடன், பட்டியலைத் தந்திருக்கிறோம்.

தேசிய அளவிலே நடைபெறுகின்ற போட்டிகளில், சிறப்பாக ஆடுகின்ற ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேசிய அளவில் விருதினையும் வழங்கி கெளரவப்படுத்துகின்றார்கள்.

ஆண்களில் சிறந்த ஆட்டக்காரருக்கு - ஏகலைவன் விருது.

பெண்களில் சிறந்த ஆட்டக்காரருக்கு - ராணி லட்சுமி விருது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/20&oldid=1377534" இலிருந்து மீள்விக்கப்பட்டது