பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கோகோ ஆட்டம்


3. இரு நீண்ட சதுரப் பகுதிகளின் உள் அளவுக் கோடான மைய இடத்தில், பக்கத்திற்கு ஒரு கம்பமாக (Post) இரண்டு கம்பங்களை ஊன்றி இருக்க வேண்டும். (படம் பார்க்க.)

ஒவ்வொரு கம்பமும் 9 சென்டி மீட்டரிலிருந்து 10 சென்டி மீட்டருக்குள்ளான சுற்றளவு உள்ளதாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். முன்னர் குறிப்பிட்ட இடத்தில், தரைக்கு மேலாக, 120 சென்டி மீட்டர் (கன அடி) உயரத்தில் கம்பங்கள் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். கம்பத்தின் மேல்முனை தலைப்பகுதி மட்டுமின்றி கம்பம் முழுவதும் சிலிம்பில் இல்லாமல் மழமழப்பாக இருக்க வேண்டும்.

4. நடப்பட்டிருக்கும் இரண்டு கம்பங்களுக்கிடையே 21.60 மீட்டர் நீளத்திலும் 30 சென்டி மீட்டர் அகலத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/24&oldid=1377415" இலிருந்து மீள்விக்கப்பட்டது