பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

29


அவ்வாறு செய்வது விதியை மீறிய செயலாகும். அது தவறாகும்.

9. நீண்ட சதுரத்தைக் கடந்து விடுதல் (To Leave the Rectangle)

ஓடி விரட்டும் ஒருவர், நீண்ட சதுரப் பகுதியிலிருந்து காலெடுத்து வெளியே வைத்து, அதிலிருந்து வந்த கம்பக்கோட்டுப் பகுதியில் வந்துவிட்டாலும், அவர் நீண்ட சதுரத்தைக் கடந்து வெளியே வந்துவிட்டார் என்றே கொள்ளப்படும்.

10. நீண்ட சதுரத்திற்கு வந்தடைதல் (To Reach the Rectangle)

கம்பக் கோட்டுக்கிடையே கால் வைத்திருக்கும் ஒரு ஓடி விரட்டுபவர், கோட்டைக் கடந்து நீண்ட சதுரப் பகுதிக்கு வந்துவிட்டால், அந்தப் பகுதிக்கு வந்து விட்டார் என்பதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

11. எல்லைக்கு வெளியே (Out of Limits)

தப்பி ஓடும் ஓட்டக்காரர் எல்லைக்குள்ளான தரைப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து, எல்லைக்கு வெளியே வந்துவிட்டால் அதாவது வெளிப்பகுதியில் கால் தொடர்பு கொண்டுவிட்டால், அவர் ஆடுகள எல்லைக்கு வெளியே சென்றதாகக் கருதப்படுவார்.

12. ஓட வந்த நிலை (Entry)

ஒரு ஓட்டக்காரர் ஆடுகளத்திற்குள் நுழைய இருக்கின்ற நேரத்தில், எல்லைக்கு வெளியே இருந்த கால் தொடர்பினை (Contact) விட்டு, ஆடுகள எல்லைக்குள் (கால்) நிற்கும் தொடர்பு கொண்டுவிட்டால், அவர் உள்ளே ஓட வந்ததாகவே கருதப்படுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/31&oldid=1377545" இலிருந்து மீள்விக்கப்பட்டது